தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மான் தோல், மான் கொம்பு, ஆமை ஓடு வைத்திருந்த நபர் கைது - இது திண்டுக்கல் சம்பவம்! - forest dept

திண்டுக்கல் அருகே மான் தோல், மான் கொம்பு மற்றும் ஆமை ஓடு வைத்திருந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்து அவரிடம் வனத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மான் தோல், மான் கொம்பு, ஆமை ஓடு வைத்திருந்த நபர் கைது!
மான் தோல், மான் கொம்பு, ஆமை ஓடு வைத்திருந்த நபர் கைது!

By

Published : May 17, 2022, 7:15 PM IST

திண்டுக்கல்:சிறுமலை அடிவாரம் பகுதியில் உள்ளது, ரெட்டியபட்டி கிராமம். இந்தப் பகுதியில் மாவட்ட வன அலுவலர் பிரபுவின் அறிவுறுத்தலின்படி சிறுமலை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழு தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது ரெட்டியபட்டியில் உள்ள ஜோசியர் சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டில் புள்ளி மான் தோல்(3), கடமான் கொம்பு (3),நரிபல் (6), ஆமை ஓடு 17 மற்றும் காட்டுப்பன்றி மண்டைஓடு, பல் ஆகியவற்றை மாவட்ட வன பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்து சுந்தரமூர்த்தி என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜோசியர் வீட்டில் அரசால் வேட்டையாடத் தடை செய்யப்பட்ட மான் தோல், கொம்பு மற்றும் ஆமை ஓடு போன்றவை பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :மான் வேட்டை: ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details