தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தில் தவறவிட்ட பணம்: ஒப்படைத்தவருக்கு பாராட்டு! - திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர்

திண்டுக்கல்: ஏடிஎம் இயந்திரத்தில் தவறவிட்ட பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நபருக்கு டிஐஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Man praised by DIG and SP  for handover missing money in ATM
ஏடிஎம் இயந்திரத்தில் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

By

Published : Sep 11, 2020, 2:17 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நேருஜி நகர் ஏடிஎம் இயந்திரத்தில் அமல் சதீஷ் என்பவர் தனது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 20,000 ரூபாய் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் திரும்பி சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து அதே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த லக்கீஸ்வரன் என்பவர் ஏடிஎம் இயந்திரத்தில் 20,000 ரூபாய் தவறவிட்டு சென்றிருப்பதை கவனித்துள்ளார். உடனடியாக அந்தப் பணத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியாவிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து பணத்தை தவறவிட்ட நபரை அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து, அமல் சதீஷிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை கண்ணியத்துடன் காவல்துறையில் ஒப்படைத்த லக்கீஸ்வரனை பாராட்டி திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா இணைந்து பரிசு வழங்கினார்கள்.

இதையும் படிங்க: கையுந்து பந்து விளையாடி மணமக்களை வரவேற்ற நண்பர்கள்

ABOUT THE AUTHOR

...view details