திண்டுக்கல்: சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அழகுவிஜய் (24). கொத்தனார் வேலை செய்து வந்தார். . இதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், இவரது மகன் அஜித்(26). கூலி வேலை செய்து வருகிறார். அஜித்தின் தங்கை துர்கா (17) கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் அழகுவிஜய் துர்காவை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் துர்கா வீட்டுக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அவ்வப்போது தகராறும் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு இருவரும் சேடபட்டியில் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற துர்காவின் அண்ணன் அஜித், தங்கையை கண்டித்ததுடன் அவர் கண் முன்பே அழகுவிஜயை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அழகுவிஜய் உயிரிழந்தார். சடலத்தை சேடபட்டி அருகே உள்ள தோட்டத்தில் மறைத்து வைத்துவிட்டு, தந்தை தமிழ்செல்வனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு , இருவரும் சேர்ந்து ஒரு சாக்கு பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து ஆத்தூர் காமராஜர் அணையின் கரை ஓரத்தில் புதருக்குள் தூக்கி வீசிவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்.