திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக கொடைக்கானல் நகர் திகழ்ந்துவருகிறது. இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்துவருகிறது. மேலும் சிலர் உணவு விடுதி போன்று வியாபாரம் செய்கின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களை ஏமாற்றும்வகையில் பண மோசடி கும்பல் அதிகரித்துவருகிறது. தற்போது தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போலி லாட்டரி சீட்டுகள் கொடைக்கானலில் விற்பனை களைகட்டிவருகிறது.