தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குளு குளு கொடைக்கானலில் மதுபானங்களுக்கு கிடு கிடு விலை' - High prices for liquor stores in Kodaikanal

திண்டுக்கல்: கொடைக்கானல் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை
மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை

By

Published : Mar 11, 2020, 7:15 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுப்பாட்டிலில் குறிப்பிட்டிருக்கும் அதிகபட்ச சில்லறைத் தொகையை விட, 10 முதல் 40 ரூபாய் வரை அதிகம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி ஒரு குவார்ட்டருக்கு 20 முதல் 25 ரூபாயும், முழுப் பாட்டிலாக வாங்கினால் 35 முதல் 40 ரூபாயும், சில வகை மதுபானங்களுக்கு 50 ரூபாயும் கூடுதலாக வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பீர் பாட்டிலைப் பொறுத்தவரை, ஒரு பாட்டிலுக்கு 30 முதல் 45 ரூபாய் வரை வாங்குவதாகக் கூறப்படுகிறது.

மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிக விலைக்கு விற்பதாகப் புகார்

முதலில் ஒரு சில கடைகளில் இதுபோன்ற வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மலைப்பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலுமே அதிக ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மண்டல மேலாளர் நடவடிக்கை எடுத்து, உரிய விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ய முன்வரவேண்டும் என்பது மதுப்பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:மாணவர்களுக்கு பாலினப்பாகுபாடு குறித்த ஆலோசனையைத் தாருங்கள்' - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details