தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துவந்த சூழலில் மதுபானக்கடைகள் திறக்கலாம் என அரசு அறிவித்திருந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதி திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சில இடங்களில் நடைபெற்றது. சில இடங்களில் அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டனர் மதுப்பிரியரகள்.
கொடைக்கானல் மதுபானக்கடையில் மது இருப்பு இல்லாததால் மதுப்பிரியர்கள் ஆவேசம் - Crime news
திண்டுக்கல்: கொடைக்கானலில் மதுக்கடைகளில் மதுபானம் இருப்பு இல்லாததால் மதுப்பிரியர்கள் ஆவேசமடைந்து, 'குறைந்த விலையிலான மது இல்லை எனக் கூறினால், கடையை அடித்து நொறுக்குவோம்' என்று கூறினர்.
கொடைக்கானல் மதுபானக்கடையில் மது இருப்பு இல்லாததால் மதுப்பிரியர்கள் ஆவேசம்
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மதுபானக்கடைகளில் மதுபானம் இருப்பு இல்லாததால், மதுப்பிரியர்கள் ஆவேசம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் ‘குறைந்த விலையிலான மது இல்லை எனக் கூறினால், கடையை அடித்து நொறுக்குவோம்' என்று கூறினர். இதனால் குறைந்த விலையிலான மதுபானங்கள் பதுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.