தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுப்பிரியர்கள் கவனத்திற்கு!!… அமலுக்கு வந்தது மது பாட்டில்கள் திரும்ப பெறும் நடைமுறை!!

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 10 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மது பாட்டில்கள் திரும்ப பெறும் நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.

அமலுக்கு வருகிறது மது பாட்டில்கள் திரும்ப பெறும் நடைமுறை
அமலுக்கு வருகிறது மது பாட்டில்கள் திரும்ப பெறும் நடைமுறை

By

Published : Jun 15, 2022, 12:25 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் மதுப் பிரியர்கள் மலைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபான பாட்டில்களை பயன்படுத்திவிட்டு காலி பாட்டில்களை சாலையோரம், விளைநிலம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் வீசி செல்கின்றனர்.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு கொடைக்கானல் வட்டத்தில் இயங்கி வரும் 9 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் திண்டுக்கல் மேற்கு வட்டம், ஆடலூரில் செயல்படும் 1 மதுபான சில்லறை விற்பனைக் கடை ஆகியவற்றில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.

விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களுக்கு அரசு நிர்ணய விலையை விட ரூ.10 கூடுதலாக செலுத்தி வாடிக்கையாளர்கள் பெற்று செல்லலாம். பின்னர் காலி மதுபானபுட்டிகளை கடைகளில் திரும்ப ஒப்படைத்து ரூ.10 பெற்றுக் கொள்ளலாம் எனவும், இந்த நடைமுறை இன்று (15.06.2022) முதல் அமலுக்கு வருவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ”தாய் நிலம் வதைக்கப்படுகிறது” வருங்காலம் எங்கே போகும் எனத்தெரியவில்லை... நீதிபதிகள் கவலை!

ABOUT THE AUTHOR

...view details