கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால், தள்ளாடி வந்த மது பிரியர்கள் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து அதிலிருந்து மது பாட்டில்களை திருடிச் செல்கின்றனர்.
அந்த வரிசையில் திண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் சாத்திரம் தெருவில் உள்ள மதுபானக் கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.