தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்கார்த்திகைக்குத் தயாராகும் விதவிதமான விளக்குகள்!

திருக்கார்த்திகை தீப பண்டிகை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நொச்சிஓடைப்பட்டி பகுதியில் விதவிதமான தீபவிளக்குள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திருக்கார்த்திகைக்கு தயாராகும் விதவிதமான விளக்குகள்...!
திருக்கார்த்திகைக்கு தயாராகும் விதவிதமான விளக்குகள்...!

By

Published : Nov 9, 2022, 7:04 PM IST

திண்டுக்கல்: கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அகல் விளக்குள் ஏற்றிவைப்பது வழக்கம். வீடுகளில் பல்வேறு வடிவிலான தீப விளக்குள் ஏற்றி பெண்கள் வழிபாடு நடத்துவார்கள். இதனால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இதற்காக திண்டுக்கல்லில் பல்வேறு விதவிதமான விளக்குள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் அடுத்த நொச்சியோடைப்பட்டியில் களிமண்ணால் பல வடிவங்களில் விளக்குள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் மதுரை, திருநெல்வேலி, கோவில்பட்டி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடக ஆகிய வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

விநாயகர், யானை முகம், மயில், சிவலிங்கம், லெட்சுமி, அடுக்கு விளக்குகள் உள்ளிட்டப் பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிவலிங்கம், சங்கு, சக்கரம், அரச இலை, ஒரு முகம், 5 முகம் உள்ளிட்ட விளக்குகள் பெண்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனை ஆர்வத்துடன் அனைத்து தரப்பினரும் வாங்கிச்செல்கின்றனர்.

இதுகுறித்து விளக்கு உற்பத்தியாளர் கஜேந்திரன் கூறுகையில், 'வருடம் முழுவதும் சீசனுக்கு தகுந்தவாறு களிமண் பொருட்கள் செய்து வருகிறோம். திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்கு அதிகளவு தயாரித்துள்ளோம். அடுக்கு விளக்குகளை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். 1 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலான விளக்குள் விற்பனைக்கு வைத்துள்ளோம்.

5 முதல் 21 விளக்குகள் கொண்ட அடுக்கு விளக்குள், லெட்சுமி விநாயகர் விளக்கு, விசிறி விளக்குகள், லிங்க விளக்கு இந்தாண்டு அறிமுகம் செய்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக விற்பனை குறைந்து இருந்த நிலையில், இந்த ஆண்டு அதிக அளவு விளக்குகளை வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்’ என்றார்.

திருக்கார்த்திகைக்குத் தயாராகும் விதவிதமான விளக்குகள்!

இதையும் படிங்க: சந்திரகிரகணம் - பழனி முருகன் கோயிலின் நடை அடைப்பு

ABOUT THE AUTHOR

...view details