தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத்திய அரசுக்கு' பதிலாக 'ஒன்றிய அரசு' எனப் புத்தகங்களில் அச்சிடப்படும் - லியோனி - தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்

அடுத்த பருவத்தில் 'மத்திய அரசு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஒன்றிய அரசு' என்று புத்தகங்களில் அச்சிடப்படும் எனத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

'மத்திய அரசுக்கு' பதிலாக 'ஒன்றிய அரசு' எனப் புத்தகங்களில் அச்சிடப்படும் - லியோனி
லியோனி

By

Published : Jul 8, 2021, 3:08 PM IST

Updated : Jul 8, 2021, 3:34 PM IST

சென்னை : தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி மரியாதை நிமித்தமாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராகப் பணியாற்ற வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு நன்றி.

எளிய மக்கள் கல்வியை சுமையாக கருதாமல், சாதாரண குழந்தைகள் விருப்பத்துடன் பாடங்களைப் படிக்க வேண்டும்.
இதில் பல புதுமைகளைப் படைக்கத் தயாராக இருக்கிறேன். 'ஒன்றிய அரசு' எனும் வார்த்தையை மக்கள் சிறப்பாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

அடுத்தப் பருவ புத்தகங்களில் 'மத்திய அரசு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஒன்றிய அரசு' என்று அச்சிடப்படும்.

'மத்திய அரசுக்கு' பதிலாக 'ஒன்றிய அரசு' எனப் புத்தகங்களில் அச்சிடப்படும் - லியோனி

33 ஆண்டுகள் ஆசிரியர் பணியிலிருந்த எனக்கு முதலமைச்சர் இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். ஒருவாரத்துக்குள் பொறுப்பேற்றுக்கொள்வேன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய கர்நாடக அரசு - பாமக கடும் கண்டனம்

Last Updated : Jul 8, 2021, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details