திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, மேட்டுப்பட்டி, மேலக்கோட்டை, கீழக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சலவை தொழிலை வாழ்வதாரமாக கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். ஏழ்மையில் வாழ்ந்துவரும் குறித்த சலவைத் தொழிலாளர் சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
மேலும், தங்களின் வாழ்வதாரமாக விளங்கி வரும் சலவைத் துறையை சீரமைத்து தருமாறும் குறித்த மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சலவைத் தொழிலாளர்கள் கூறுகையில்,“தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் , நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் பண்ணைக்காடு காமராஜபுர வண்ணர் சலவை துறையை சீரமைத்து தரக்கோரியும், மாவட்ட ஆட்சியரிடம் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் மனு அளித்துள்ளோம்” என்றனர்.