தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டேன் சாமிக்கு அஞ்சலி - இறுதி அஞ்சலி

பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிய ஸ்டேன் சாமியின் அஸ்தி நேற்று திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

last respect  last respect for stan samy  stan samy  dindigul news  dindigul latest news  last respect function for stan samy in dindigul  ஸ்டேன் சாமி அஸ்திக்கு அஞ்சலி  அஸ்திக்கு அஞ்சலி  திண்டுக்கல் செய்திகள்  திண்டுக்கலில் ஸ்டேன் சாமி அஸ்திக்கு அஞ்சலி  இறுதி அஞ்சலி  ஸ்டேன் சாமி
அஸ்திக்கு அஞ்சலி

By

Published : Jul 29, 2021, 1:48 PM IST

திண்டுக்கல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இன மக்களின் உரிமைக்காக போராடிய ஸ்டேன் சாமி, மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜூலை 5ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரது அஸ்தி நேற்று (ஜூலை 28) திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஸ்டேன் சாமியின் அஸ்திக்கு திண்டுக்கல் மாவட்ட அனைத்து கட்சியினர், பேராயர்கள், பாதிரியார்கள், கிறிஸ்தவ மக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டேன் சாமியின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு...

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழனி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஸ்டேன் சாமியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, பேராலயத்தில் கூடியிருந்த மக்களிடம் ஸ்டேன் சாமி சிறையில் பட்ட கஷ்டங்களையும், பழங்குடியின மக்களின் உரிமைக்காக அவர் போராடியது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்?

ABOUT THE AUTHOR

...view details