திண்டுக்கல்: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமி ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்காக தொடர்ந்து போராடியவர். எல்கர் பரிஷத் வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஒன்றிய அரசால் மும்பையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சாமி மருத்துவமனையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி உயிரிழந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை ஆலயத்தில் ஸ்டேன் சாமி உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆலயங்களில் இவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.