திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே அண்ணாநகரை சோ்ந்த மீனாச்சாமி அவரது மனைவி ஜெயக்கொடி இருவரும், டிவிஎஸ்-50 வாகனத்தில் பட்டிவீரன்பட்டி பைபாஸ்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் சாலையை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக பின்னால் தேனியிலிருந்து - திண்டுக்கல் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு லாரி மோதி தூக்கி வீசப்பட்டனர்.
இந்நிலையல் சம்பவ இடத்திலேயே இருவரும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சங்கரேஸ்வரன் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தார்.
பின்னர் லாரியில் பயணம் செய்து காயம் அடைந்தவா்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வயலில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் - 2 விமானிகள் மீட்பு