தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக லேப்ராஸ்கோபி சிகிச்சை!

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக லேப்ரோஸ்கோபி மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 3, 2023, 1:59 PM IST

கொடைக்கானலில் முதன்முறையாக லேப்ரோஸ்கோபிக் மூலமாக அறுவை சிகிச்சை; பொதுமக்கள் வரவேற்பு

திண்டுக்கல்: கொடைக்கானல் புகழ்பெற்ற உலக சுற்றுலா தலமாக இருந்தாலும் அங்கு மருத்துவ வசதிகள் குறைவுவாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது முதன்முறையாக லேப்ரோஸ்கோபி மூலமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

முதற்கட்டமாக ஆறு நோயாளிகளுக்கு தைராய்டு கட்டி அகற்றம், கர்ப்பப்பை அகற்றம், குடலிறக்கம் உள்ளிட்ட நோய்களுக்கு லேப்ரோஸ்கோபி மூலமாக முதற்கட்டமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. மேலும் இதற்கு முன்னர் வரை பெரிய அளவிலான மருத்துவ தேவை என்றால் கொடைக்கானலிலிருந்து மதுரை, திண்டுக்கல் தேனி உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். தற்போது லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை கொடைக்கானலிலேயே துவங்கப்பட்டுள்ளதால் இதனை கொடைக்கானல் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

மேலும், இந்த அறுவை சிகிச்சையை இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்களின் சமூக நலப்பிரிவு தலைவரும், மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வருமான மருத்துவர் மருது பாண்டியன் தலைமையில் டாக்டர். திரிலோக சுந்தர் உள்ளிட்ட ஆறு மருத்துவர்கள் இந்த லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சையை முதன்முறையாக கொடைக்கானலில் துவக்கி உள்ளனர்.

முதற்கட்டமாக நடந்த 6 லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகள் நலமாக உள்ளனர். மேலும் இதே போன்று லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மருத்துவமனையை அணுகலாம் எனவும், இந்த அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே பெறப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:video: கோடை வெயிலில் நீச்சல் குளத்தில் விளையாடி மகிழ்ந்த பழனி கோயில் யானை!

ABOUT THE AUTHOR

...view details