தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் அடுக்கம் சாலையில் மண் சரிவு!

திண்டுக்கல்: கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் ஏற்பட்ட மண் சரிவினால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் அடுக்கம் சாலையில் நிலச்சரிவு

By

Published : Nov 28, 2019, 8:16 AM IST

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழையால் அவ்வப்போது மண் சரிவு ஏற்படுவதுண்டு. நேற்று பெய்த கனமழையில் கொடைக்கானலிலிருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள கொய்யா தோப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் அந்தப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து எடுத்து வரும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கொண்டு செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கொடைக்கானல் அடுக்கம் சாலையில் நிலச்சரிவு

கடந்த வாரம் ஏற்பட்ட மண் சரிவையே தற்போதுதான் நெடுஞ்சாலைத் துறையினர் சரி செய்து வருகின்றனர். இந்த மண் சரிவை எப்போது சரி செய்யப்போகிறார்களோ என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு: தமிழர் உள்பட 5 பேருக்கு சிறை.!

ABOUT THE AUTHOR

...view details