திண்டுக்கல்:பழனி பகுதியில் நேற்றிரவு (ஆக. 30) பெய்த கனமழை காரணமாக பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையின் 13ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் சவரிகாடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பழனி அருகே மலைப்பாதையில் மண்சரிவு - சாலையை சரி செய்யும் பணிகள் தீவிரம்
பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Etv Bharat
விடுமுறை காரணமாக அதிக அளவில் கொடைக்கானலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஊர் திரும்ப முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர், சாலையை விரைவாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காவிரியில் 2 லட்சத்து 12 கன அடி நீர் வர வாய்ப்பு... 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கைவிட்ட மத்திய நீர்வள ஆணையம்