கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தற்போது தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. நேற்று இரவு சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொடைக்கானலில் மழை காரணமாக மண்சரிவு! - heavy rain in kodaikanal
திண்டுக்கல்: கொடைக்கானலில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
landslide in kodaikanal
இதனால் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையான செண்பகனூர் அருகே மூன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிகப்படியான மழை கொடைக்கானலில் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: தொடங்கியது வடகிழக்குப் பருவமழை - சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை!