திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களில் பெய்த மழையின் அளவு மட்டும் 50 செ.மீ.க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்த கனமழையின் காரணமாக அடுக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் பெரியகுளம் சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறை விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமத்திற்கு செல்லும் இருசாலைகளின் துண்டிப்பால் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.