தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தில் தீ விபத்து - lakshmi villas bank

திண்டுக்கல் லட்சுமி விலாஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

ஏடிஎம் இயந்திரத்தில் மின்கசிவு
ஏடிஎம் இயந்திரத்தில் மின்கசிவுஏடிஎம் இயந்திரத்தில் மின்கசிவு

By

Published : Jul 5, 2021, 7:45 AM IST

Updated : Jul 5, 2021, 9:37 AM IST

திண்டுக்கல்: ஆர் எஸ் சாலையில் லட்சுமி விலாஸ் வங்கி ஏடிஎம் உள்ளது. இங்கு நேற்று (ஜூலை 4)ஆம் தேதி மாலை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வந்துள்ளது.

இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது, ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள மானிட்டர் முழுவதும் எரிந்து சேதமானது. தீ விரைந்து அணைக்கப்பட்டதால் இயந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது. மின்கசிவே தீ விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை: புதிய தளர்வுகளில் கரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள்!

Last Updated : Jul 5, 2021, 9:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details