தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Viral Video - குடிபோதையில் பெண் தகராறு - குடிபோதையில் பெண் தகராறு

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் ஒரு ஆணை வம்பிழுக்கும் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குடிபோதையில் பெண் தகராறு
குடிபோதையில் பெண் தகராறு

By

Published : Jun 26, 2022, 11:02 PM IST

திண்டுக்கல்: காமராஜர் பேருந்து நிலையத்தில் தினமும் பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (ஜூன் 26) ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.

பேருந்து நிலைய தெற்கு வாசல், மதுரை, தேனி, கொடைக்கானல், வத்தலகுண்டு ஆகியப் பேருந்துகள் நிற்கும் இடங்களின் வழியாக ஒரு பெண் குடிபோதையில் வந்தார்.

குடிபோதையில் பெண் தகராறு

அவர், ஆண் ஒருவரை அடித்து ஆபாசமாகப் பேசி, பயணிகள் முன்பு தரக்குறைவாக நடந்து கொண்டார். அனைவரையும் மிரட்டும் தொனியிலும் அவர் பேசினார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:அமைச்சர்களிடம் பேசி அரசு வேலை தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details