திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் இன்று (ஏப்.6) பாஜக மாநில தலைவர் முருகன் சாமி தரிசனம் செய்தார். தொடர்து தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அப்போது அவர் அதிமுக கூட்டணியில் பாஜக 20 க்கு 20 இடங்களையும் கைப்பற்றும் என்றும், தாராபுரத்தில் தனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எல்.முருகனுடன் பாஜக நிர்வாகிகள் பலரும் சாமி தரிசனம் செய்தனர்.
பாஜக 20 இடங்களிலும் வெற்றி பெறும் - எல்.முருகன் நம்பிக்கை! - பழநிமுருகன் கோவில்
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்ட 20 இடங்களிலும் வெற்றி பெறும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத்தலைவர் எல் முருகன்