திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜன.27) காலை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி அன்று முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆறாம் கால யாக பூஜையுடன் துவங்கிய பழனி கோயில் கும்பாபிஷேகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளது.
இன்று அதிகாலை பழனி மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோயில், படிப்பாதையில் உள்ள இடும்பன் கோயில், கடம்பன் கோயில், கருப்பண்ணசாமி சுவாமி கோயில், கிரிவீதியில் உள்ள 5 மயில்கள் கோயில் உட்பட 80க்கும் மேற்பட்ட திருக்கோயில் மற்றும் தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 9.50 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.