தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதம், கடவுள் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் மோடி! - கே.எஸ். அழகிரி - கடவுள், மதம்

திண்டுக்கல்: பிரதமர் மோடி மதம், கடவுள் என்ற பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி மக்களிடையே வேற்றுமையை விதைப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

ks.alagiri

By

Published : Aug 5, 2019, 6:05 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மோடி ஹிட்லர், முசோலினி போல ஏகாதிபத்தியத்தை மக்கள் மீது ஏவுகிறார். உண்மையில் காஷ்மீர் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானோடு பிரியாமல் இந்தியாவில் விருப்பத்தோடுதான் இணைந்தார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி

அவர்கள் இந்தியாவின் குடிமக்கள். ஆனால் இன்று மோடி காஷ்மீரை வைத்து தவறான அரசியலை கையாளுகிறார். அதேபோல காங்கிரஸ் கட்சி மீது தவறான கருத்துகளை பாஜக முன்வைக்கிறது. வரலாறு அறிந்தவர்களுக்கு காங்கிரசின் தியாகங்கள் தெரியும். மக்களிடையே வேற்றுமையை விதைக்கிறார்.

இது நல்லதொரு சமூகத்தை உருவாக்காது. ஒரு நல்ல தேசம் ஒற்றுமையோடுதான் செயல்பட முடியும், அப்படித்தான் செயல்பட வேண்டும். அதைவிடுத்து மதம், கடவுள் என்ற பெயரால் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details