திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 45 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும் ஒரே கோயிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இந்த ஆண்டு மாசிப் பெருந்திருவிழா கடந்த 20ஆம் தேதி பூ அலங்கார மண்டகப்படியுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி பூத்தமலர் பூ அலங்காரத் தேர்பவனி நடைபெற்றது. இந்நிலையில், நேற்று கோயிலின் மைய மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.