தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியால் கரோனா பீதி! - பிரான்ஸ் நாட்டுத் தம்பதியினரால் கரோனா பீதி

திண்டுக்கல்: கொல்லப்பட்டி அருகே பழுதாகி நின்ற ஆட்டோவில் வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியால் கரோனா பரவும் என்ற பீதி அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டச் செய்திகள்  பிரான்ஸ் நாட்டுத் தம்பதியினரால் கரோனா பீதி  kollapatti people
பிரான்ஸ் நாட்டைச் சேரந்த தம்பதியால் கரோனா பீதி

By

Published : Mar 25, 2020, 9:02 PM IST

Updated : Mar 26, 2020, 9:50 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலை கொல்லப்பட்டி அருகே வெளிநாட்டைச் சேர்ந்த தம்பதி ஆட்டோவில் சென்றபோது என்ஜினில் பழுது ஏற்பட்டு வழியில் நின்றது. அப்போது, அவர்களைப் பார்த்த அப்பகுதி மக்கள், இவர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தில் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை செய்தனர். அதில், அவர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொடைக்கானல் வந்து தங்கியிருந்ததும் அங்கிருந்து ஆட்டோ ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கி அதன் மூலம் சென்னை செல்லயிருந்ததும் தெரியவந்தது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியால் கரோனா பீதி

அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது, 'மருத்துவமனைக்கு வரமுடியாது, ஏற்கனவே நாங்கள் 6 முறை பரிசோதனை செய்து விட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். இதன்பின் அவர்கள் வந்த ஆட்டோவை கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வேடச்சந்தூர் வழியாகச் செல்லும்படி அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர்களுக்கு முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யாமல் அனுப்பிவைத்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல்!

Last Updated : Mar 26, 2020, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details