திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு கொடைரோடு சந்தைக்கு அதிகாலை 5 மணி முதலே சுமார் 500 கிலோ பன்னீர் ரோஜா பூக்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால், தற்போது விழாக்காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் குறைந்துள்ளதால் பன்னீர் ரோஜா விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
தற்போது இந்தப்பூக்கள் ஐம்பது ரூபாய்க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனவும்; தற்போது ஒரு பன்னீர் ரோஜா பூ கிலோ 20 முதல் பத்து ரூபாய் வரை விற்கப்படுவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.