திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான வட்டகானல் பகுதியில், இயற்கை அழகை காண்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை இஸ்ரேல் நாட்டினர் தொடர்ச்சியாக இங்கு வருவார்கள். தற்போது டிசம்பர் மாதம் தொடங்கியுள்ளதால் அவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டினர் மற்றும் மதபோதகர் (கபாத்) உள்ளிட்டோர் மீது ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்தது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.