திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உகார்த்தே நகர் பகுதியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடாந்திர கொடியேற்ற திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை பக்தர்கள் கோயிலுக்கு வந்த நிலையில் கோயில் உண்டியல், கோயில் கதவுகள் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனே அருகில் இருந்தவர்கள் கொடைக்கானல் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையிலான காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
திருட்டு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை கோயில் உண்டியலிலிருந்து பணம் திருடப்பட்டதோடு ஆலயத்திற்கு உள்ளே உள்ள பொருள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று இரவு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் உண்டியலை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.