தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சக மாணவரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற 10ஆம் வகுப்பு மாணவன் - scissor

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், கபில் ராகவேந்திரா என்பவர் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

பலியான மாணவன்

By

Published : Jul 31, 2019, 1:44 AM IST

Updated : Jul 31, 2019, 2:23 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கி வரும் வித்யாஷ்ரம் பள்ளியில், கபில் ராகவேந்திரா என்ற மாணவர் 10ஆம் வகுப்பு A பிரிவில் பயின்று வந்தார். இவர் ஓசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு B பிரிவில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் படித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கபில் ராகவேந்திராவை, அந்த மாணவர் கத்தரிக்கோலால் குத்தியதில், கபில் ராகவேந்திரா பலியானார். இந்தக் கொலை தொடர்பாக கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Last Updated : Jul 31, 2019, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details