திண்டுக்கல் : கொடைக்கானலில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை (ஆக.29) மீண்டும் திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவி வந்தச் சூழலில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்த சூழலில் பல்வேறு தளர்வுகளையும் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாரச் சந்தை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. தொடர்ந்து, கொடைக்கானல் மக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைத்திட அனுமதி பெற்ற வாகனங்களில் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.