தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் நடுங்கவைக்கும் உறைபனி! - kodaikanal news

கொடைக்கானலில் 5 டிகிரிக்கும் கீழ் காலநிலை சூழல் இருப்பதால், கடுமையான உறைபனி நிலவுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

kodaikanal weather update
kodaikanal weather update

By

Published : Feb 11, 2021, 4:13 PM IST

திண்டுக்கல்:பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கடுமையான உறைபனி நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்திருக்கிறது.

கொடைக்கானலில் குளிர்காலம் என்பது டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை மட்டுமே இருக்கும். இந்தக் காலங்களில் தான் உறை பனியானது நிகழ்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கடுமையான மழை காரணமாகப் பனியின் காலம் தற்போது சரை நீடித்திருக்கிறது.

இந்த மாதத்தில் முதன்முறையாக உறை பனியானது நிகழ்ந்திருக்கிறது. உறை பனி காரணமாக அதிகாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. கொடைக்கானலில் கீழ் இருக்கக்கூடிய பகுதிகளில் பசுமை போர்த்திய வெண் கம்பளம் போல் புல்வெளிகள் காட்சியளிக்கிறது.

என்னதான் இந்தக் காலச்சூழல் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்தாலும், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details