தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீரில் தொற்று நோய் பரவும் அபாய‌ம்! - குடிநீரில் தொற்று நோய் ஏற்படும் அபாய‌ம்

திண்டுக்க‌ல்: அப்ச‌ர்வேட்ட‌ரி குடிநீர் தேக்க‌த்தில் சுத்திக‌ரிப்பு இயந்திரம் பழுதடைந்தது த‌ண்ணீர் சுத்திக‌ரிப்பு செய்ய‌ப்ப‌டாமல் விநியோக‌ம் செய்யப்ப‌டுவ‌தால் தொற்று நோய் ப‌ர‌வும் அபாய‌ம் ஏற்பட்டுள்ளது.

Kodaikanal Solar Observatory

By

Published : Nov 22, 2019, 1:17 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் அப்ச‌ர்வேட்ட‌ரி ப‌குதியில் குடிநீர் தேக்க‌ம் அமைந்துள்ள‌து. இங்கிருந்து கொடைக்கான‌ல் ந‌க‌ர் ப‌குதிகளான‌ பாம்பார்புர‌ம், செல்ல‌புர‌ம், புதுக்காடு, கீழ்பூமி, அண்ணாசாலை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதி பொதும‌க்க‌ளுக்கு குடிநீர் விநியோக‌ம் செய்ய‌ப்ப‌டுகிற‌து. இதிலிருந்து பத்து நாட்க‌ளுக்கு ஒரு முறையும் சில‌ ப‌குதிக‌ளில் ஏழு நாட்க‌ளுக்கு ஒருமுறையும் விநியோக‌ம் செய்ய‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

இந்நிலையில் அப்ச‌ர்வேட்ட‌ரி குடிநீர் தேக்க‌த்தில் அமைந்துள்ள‌ சுத்திக‌ரிப்பு இயந்திரம் செய‌ல்ப‌டாம‌ல் ப‌ழுத‌டைந்து காண‌ப்ப‌டுகிற‌து. இதனால் சுத்திகரிப்பு செய்யாமல் த‌ண்ணீர் விநியோகிக்க‌ப்ப‌டுகிற‌து.

அப்ச‌ர்வேட்ட‌ரி குடிநீர் தேக்க‌ம்

எனவே, இந்த‌ த‌ண்ணீரை ப‌ருகும் குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் பெரிய‌வ‌ர்க‌ளுக்கு தொற்று நோய் ப‌ர‌வும் அபாய‌ம் உள்ளது. இது குறித்து ப‌ல‌முறை கொடைக்கான‌ல் நகராட்சியினரிடம் ம‌னு அளித்தும் எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌வில்லை என‌ பொதும‌க்க‌ள் குற்ற‌ம்சாட்டுகின்ற‌ன‌ர். இதுதொடர்பாக மாவ‌ட்ட‌ நிர்வாக‌ம் உடனடியாக ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிக்க: மாமியாரை கடத்திய மருமகளுக்கு கொலை வழக்கில் தொடர்பா? காவலர்கள் தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details