திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான தலைமை குடிநீர்த் தேக்கம் அமைந்துள்ளது. இந்த குடிநீர்த் தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 21 அடியாகும். இந்த குடிநீர் தேக்கத்தில் இருந்து கொடைக்கானல் நகரப் பகுதிகளான பாம்பார்புரம், புதுக்காடு, செல்லபுரம், வட்டக்கானல், அப்சர்வேட்டரி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளுக்கு நகராட்சியால் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கொடைக்கானலில் திடீர் கனமழை: அப்சர்வேட்டரி குடிநீர்த் தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வு - கொடைக்கானலில் திடீர் கனமழை
திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள குடிநீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

kodaikanal
அப்சர்வேட்டரி குடிநீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வு
கோடைகாலம் தற்போது தொடங்கியதையடுத்து, வெயிலின் தாக்கத்தால், இந்தக் குடிநீர்த் தேக்கத்தில் நீர் மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டுநாள்களாக கொடைக்கானலில் பெய்த கனமழையால், அப்சர்வேட்டரி குடிநீர் தேக்கத்தில் நீர்மட்டம் 17அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.