திண்டுக்கல் அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு தினமும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இது முக்கிய சுற்றுலாத்தலம் என்பதால் காவல் துறையினர் அதிகளவில் வாகன தணிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதில் ஆவணங்களின்றி மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றது.
காவல்நிலையத்திலுள்ள இருசக்கர வாகனங்களை ஏலம் விட கோரிக்கை! - latest dindugul news
திண்டுக்கல்: கொடைக்கானல் காவல் நிலையத்தில், பல்வேறு வழக்குகளில் பிடிக்கப்பட்டு சேதமடைந்திருக்கும் இருசக்கர வாகனங்களை ஏலம்விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெரும்பாலான வாகனங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், அவை மீண்டும் பயன்படுத்த முடியாத வண்ணம் சேதமடைந்து வருகின்றன. மேலும் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் நிலைய வளாகங்களிலேயே நிறுத்தி வைக்கப்படுவதால், காவல் துறையினரின் வாகனங்களை நிறுத்த முடியாத நிலையும் ஏற்படுகின்றது. எனவே பறிமுதல் செய்யப்பட்டு நீண்ட நாட்களாகிய வாகனங்களை ஏலம் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோத்தகிரியில் பேக்கரி கடையை துவம்சம் செய்த கரடிகள்