தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் டீசல் விலை உயர்வு - விவசாயிகள் வேதனை - காய்கறிகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

திண்டுக்கல்: கொடைக்கானலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்துவருகின்றனர்.

kodaikanal_vegitables
kodaikanal_vegitables

By

Published : Feb 20, 2021, 8:27 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் வேளாண்மையே பிரதான தொழிலாக இருந்துவருகிறது. இங்கு, முக்கிய வேளாண் பயிர்களாக கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளைப் பூண்டு, பட்டாணி, பீன்ஸ் ஆகியவை அதிக அளவில் பயிரிடப்பட்டுவருகின்றன.

தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானலில் நிலவும் பனியால் செடிகள் கருகியும் வருகின்றன.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு - விவசாயிகள் வேதனை

இந்நிலையில், இந்தியா முழுவதிலும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் வேதனையடைந்துவருகின்றனர்.

இதற்கிடையில், விளைவித்த காய்கறிகள் அனைத்தும் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால் மட்டுமே காய்கறிகள் ஏற்றுமதி செய்ய முடியும் என்கின்றனர் விவசாயிகள். மேலும், உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர் .

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஏசி பேருந்துகளை இயக்க அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details