திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இயற்கையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள மரங்கள், செடி, கொடிகள் மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், யூகலிப்டஸ் மரங்களில் இருந்து உருவாக்கப்படும் தைலம் கரோனா தொற்று மற்றும் தோல் நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறை நிரூபித்துள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரங்களில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்த ஆராய்ச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறையினர் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட வகைகளான யூகலிப்டஸ் மரங்கள் கண்டறியப்பட்டன.