திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கட்டார் வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொடைக்கானல் ஒன்றிய ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், தலைவர், துணை தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.
ஒன்றிய உறுப்பினர்களுக்கு அவரவர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனி அறைகளை அமைத்து தரரவேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், நடைபெற்ற ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.