திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆனந்தகிரி நான்காவது தெருவில் நகராட்சிக்கு சொந்தமான உழவர் சந்தை அமைந்துள்ளது. கொடைக்கானலில் விளைவிக்கப்படும் காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்வது வழக்கம்.
ஆனால், இந்த உழவர் சந்தை கட்டிமுடிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பைகளாக காட்சியளிக்கிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், குடிகாரர்களின் வசிப்பிடமாகவும் அது மாறி வருகிறது. கரோனா அச்சுறுத்தலின் காரணமாக வார சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், உழவர் சந்தையை திறந்து மக்கள் பயன்பெறச் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.