தமிழ்நாடு எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 60 விழுக்காடுப் பயணிகளுடன் பேருந்துகள் இயங்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள சென்னை மண்டலம் நீங்கலாக, அனைத்து மண்டலங்களிலும் இன்று பேருந்து சேவைகள் தொடங்கியுள்ளன.
பேருந்து சேவை கேட்கும் கொடைக்கானல் மலைக்கிராம மக்கள்! - kodaikanal tribal people request for bus service
திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் பேருந்து சேவை தொடங்காததால் மலைக் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஆனால், மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பேருந்துகள் இயக்கப்படாததால் கொடைக்கானலில் இருந்து செல்லக்கூடிய மலைக்கிராமப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பள்ளங்கி, வில்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், தங்களது ஊர்களிலிருந்து அரசுப் பணி நிமித்தமாகவும் பல்வேறு பணிகள் காரணமாகவும் கொடைக்கானல் நகர்ப் பகுதிக்கு சென்று வரமுடியாமல் அவதி அடைந்துள்ளனர் .
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கூறுகையில், "கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடை நீடித்துள்ளதால், பேருந்து இயக்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்குவதால், அந்தப் பேருந்துகளில் கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடிய நிலை ஏற்படும். இதனால், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் பேருந்துகள் இயக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.