கரோனா வைரஸ் எதிரொலியின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி அவர்களை நம்பியிருக்கும் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துவந்தனர். தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் வரலாம் என அரசு அறிவித்திருந்தது.
கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறக்கப்படும்!
திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ளா சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறக்கப்படும் என வனத்துறை அறிவத்துள்ளது.
மேலும் இ-பாஸ் முறையிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று அதிகரித்து வந்தது. இதில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண் பாறை ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வனத்துறை அலுவலகத்தில் வனக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை கட்டுப்பாட்டில் சுற்றுலா தலங்கள் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று (நவ.17) முதல் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா தல சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.