திண்டுக்கல்:கரோனா தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும், கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பாதிக்கப்பட்டது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அதிகம் மலைப்பகுதிகளுக்கு வரும் காரணத்தால், இந்த பொது முடக்கத்தால் சனிக்கிழமைகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது.
இந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து கொடைக்கானல் மலைப்பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வழக்கம்போல சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முடிவு - இயல்பு நிலைக்குத் திரும்பிய கொடைக்கானல்! படகு சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் குளிரை அனுபவித்தும் மகிழ்ந்து வருகின்றனர். இதனால் சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:மாநகராட்சி உதவி பொறியாளர் மீது தாக்குதல் - திமுக எம்எல்ஏ சங்கர் மீது காவல்துறையில் புகார்