திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாகத் திகழ்கிறது. இந்த வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளுடன் வந்த வாகனம் ஒன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனைக் கண்டு பதற்றமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானவர்களைப் பத்திரமாக மீட்டனர்.