தமிழ்நாடு

tamil nadu

உக்ரைனில் சிக்கிய கொடைக்கானல் மாணவி?

போர்மேகம் சூழ்ந்துள்ள உக்ரைனில் கொடைக்கானல் மாணவி ஒருவர் சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து, இந்திய மாணவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By

Published : Feb 24, 2022, 5:23 PM IST

Published : Feb 24, 2022, 5:23 PM IST

உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க கோருவது தொடர்பான காணொலி
உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க கோருவது தொடர்பான காணொலி

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

மேலும் கிழக்கு உக்ரைனின் இரு பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யப்படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2 லட்சம் ராணுவ வீரர்களை எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து உக்ரைன் அரசு மீது, ரஷ்யா நடத்திய சைபர் தாக்குதலால் இணைய சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க கோருவது தொடர்பான காணொலி

ஏராளமான இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், இணைய வசதியும் முடங்கியுள்ளதால், பெற்றோர் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். உக்ரைனில் கொடைக்கானலைச் சேர்ந்த மாணவி ஒருவரும் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ரஷ்யாவின் 5 விமானங்கள், 1 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது; உக்ரைன்

ABOUT THE AUTHOR

...view details