திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெயிலும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்துவருகிறது. தொடர்ந்து தற்போது ஊரடங்குத் தளர்வுகளின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் தொடங்கி உள்ளது.
கண்கவரும் கொடைக்கானல் பசுமை பள்ளதாக்கின் அழகிய காட்சிகள் கொடைக்கானலில் அவ்வப்போது மாறிவரும் காலநிலையால் இயற்கையின் அழகு காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
இந்நிலையில் கொடைக்கானலில் சுமார் 5000 அடி உயரமாக இருக்கக்கூடிய பசுமைப் பள்ளத்தாக்கு எனப்படும் தற்கொலைப் பாறை, பசுமை நிறைந்த மரங்கள், செடி, கொடிகள் எழில் கொஞ்சும் காட்சிகள் காண்போரை பரவசப்படுத்தி வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 'தூத்துக்குடியில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்'