கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். இதனால் இந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் சாலையோரங்களில் நடத்தப்பட்டுவருகின்றன. இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனர்.
ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் வியாபாரிகள் - வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி
திண்டுக்கல்: வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்பட்ட சாலையோரக் கடைகளை மீண்டும் அமைக்க அனுமதியளிக்கக் கோரி, வியாபாரிகள் தங்களது ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
street vendors protest
இந்நிலையில், சாலையோரக் கடைகளை கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறையினர் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அகற்றியுள்ளனர்.
கடைகளை அகற்றியதால் சாலையோர வியாபாரிகள் வியாபாரமின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் மீண்டும் கடைகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.