சென்னை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.
கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலாப் பயணிகள் நின்று ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானலில் இருந்து அதிவேகமாகச் சென்ற வாகனம் ஒன்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சுற்றுலாப்பயணிகளை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தீவிர சிகிச்சை ஆனது அளிக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் விபத்து இந்த விபத்தானது வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளின் காரணமாக ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மலைச்சாலையில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களைக் கண்காணித்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:திண்டுக்கல் அருகே ஒருவர் சுட்டுக்கொலை