திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும்விதமாக, வெள்ளி அருவி பகுதி அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் நகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து அருவி அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது. இதில், சாலையோர வியாபாரக் கடைகளும் அடங்கும்.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என்றும் மீண்டும் கடைகள் அப்பகுதியில் அமைக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் கூறி சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வருவாய் கோட்டாட்சியர் ஆனால், கடைகள் அமைக்க அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து, நேற்று 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து கடைகள் அமைக்க அனுமதியளிக்க வலியுறுத்தி அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இன்னும் ஐந்து நாள்களில் வியாபாரிகளின் பிரச்னையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பின் கடைகள் அமைக்க அனுமதியளிக்கப்படும் என்று கோட்டாட்சியர் உறுதியளித்தார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த பின் வியாபாரிகள் அங்கிருந்து விடைபெற்றனர்.
இதையும் படிங்க: கொடைக்கானல் சுற்றுலாத்தலத்தில் பயன்பாடற்று கிடக்கும் இ-டாய்லெட் கழிப்பறைகள்