தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் பள்ளி மாணவன் தோப்புக்கரணத்தில் சாதனை - ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

கொடைக்கானல் தனியார் பள்ளி மாணவர், ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் செய்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

தோப்புக்கரணத்தில் சாதனை செய்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவன் செய்தியாளர்களிடம் பேசும் காணொலி
தோப்புக்கரணத்தில் சாதனை செய்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவன் செய்தியாளர்களிடம் பேசும் காணொலி

By

Published : Jun 29, 2021, 7:56 AM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவன் அஜய் பிரசன்னன். இவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அஜய் பிரசன்னன் பிட்ஜெட் ஸ்பின்னர்(Fidget Spinner) சுழற்றி உலக கின்னஸ் சாதனைப் படைத்திருந்தார்.

அதே மாணவர் ஒரு நிமிடத்தில் 82 முறை தோப்புக்கரணமிட்டு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தார்.

தற்போது தனது பழைய சாதனையை முறியடிக்கும் விதத்தில், ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணமிட்டு ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக மாணவருக்குத் தனியார் விடுதியில் வைத்து பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தோப்புக்கரணத்தில் சாதனை செய்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பள்ளி மாணவன் செய்தியாளர்களிடம் பேசும் காணொலி

இதுகுறித்து மாணவன் அஜய் பிரசன்னன் பேசுகையில், 'தோப்புக்கரணத்தால் நினைவாற்றல் சக்தி அதிகரிக்கும். இதனால் அனைவரும் பாரம்பரிய கலையான தோப்புக்கரணத்தை செய்யவும். மேலும் தோப்புக்கரணத்தை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க :துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை: தங்கம் வென்றார் ரஹி சர்னோபத்!

ABOUT THE AUTHOR

...view details