திண்டுக்கல்:சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்குப் பொது மக்கள் வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி இருக்கும் வியாபாரிகள் பல்வேறு இடங்களில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகள் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன என குற்றசாட்டு எழுந்தது.
கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் அலுவலர்கள் ஆய்வு
போக்குவரத்துக்கு இடையூறாக கடை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் அலுவலர்கள் ஆய்வு
இதன் காரணமாக கடந்த வாரத்தில் விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையர் நாரயணன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோர் இன்று (ஆக.3) ஆய்வு மேற்கொண்டனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை மாற்று இடத்தில் அமைக்கும்படி வியாபாரிகளிடம் அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: நாளை முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை - ஏன் தெரியுமா?